உங்கள் வலைப்பதிவிற்கான செல்பேசி பதிப்பை உருவாக்குவது எப்படி?



தமிழ் இணையத்தை (http://m.thamizmanam.com - செல்பேசிக்கான பதிப்பு.) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ‘தமிழ்மணம்' குழுவினர்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
'தமிழ்மணம்' செல்பேசிகளுக்கு ஏற்றவாறு தயாராகிவிட்டது போல் பதிவர்களும் தங்களது வலைப்பதிவுகளை செல்பேசிகளுக்கு எற்றது போல் எளிதாக மாற்றலாம். அதோடு, செல்பேசி பதிப்பிற்கென்றே தனியான இணைய முகவரியையும் இலவசமாகவே பெறலாம்.

அப்படி மாற்றிய இந்த 'வளர்தமிழ்' வலைப்பதிவைத் தான் அருகில் படத்தில் பார்க்கிறீர்கள். இந்த வளர் தமிழ் வலைப்பதிவின் செல்பேசி பதிப்புக்கான இணைய முகவரி : http://vtamil.mofuse.mobi/

உங்கள் வலைப்பதிவுகளையும் மாற்ற நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: http://www.mofuse.com/

குறிப்பு: சின்ன மாற்றங்களுடன் இப்பதிவு இன்று மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.


4 மறுமொழிகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல உபயோகமான தகவல், நன்றி நண்பரே...

சொன்னது…

நல்லதொரு தகவல். நன்றி.

எனது செல்பேசி பதிவை nokia 95 திறத்து பார்த்தபோது தமிழில் தெரியவில்லை. எல்லா தமிழ் எழுத்துகளும் கட்டம்கட்டமாக (square box) தெரிகிறது.
தமிழிலில் தெரிய என்ன செட்டப் செய்ய வேண்டும்.

unicode support-உள்ள nokia mobile model எதுவெல்லாம் சந்தையில் கிடைக்கிறது. விபரம் அறிய ஆவல்.

அன்புடன்
இஸ்மாயில் கனி

சொன்னது…

நல்ல தகவல்
நன்றி

ஃஃunicode support-உள்ள nokia mobile model எதுவெல்லாம் சந்தையில் கிடைக்கிறது. விபரம் அறிய ஆவல்.ஃஃ

சிம்பியன் சிஸ்டம் 60 சீரிஸ் பெரும்பாலும் யுனிபோட் சப்போர்ட் பண்ணுவதில்லை. ஆனா 40 சீரிஸ் சப்போர்ட் பண்ணும்.
n95 ல் வெப் பிரவுசரில் Option > charecter encoding ஐ UTF-8 க்கு மாற்றவும். பிறகு ஓகேயாயிடும்.
புதிய n95 firmware update வந்துள்ளது. மாற்றிவிடுங்கள்

சொன்னது…

நன்றி நண்பரே..நிச்சயம் உபயோகமானது.. அவசரமான நேரத்தில் பலபேருக்கும் தங்கள் வலைப்பதிவுகளுடன் தொடர்பிலிருக்க உதவும்..

ஆனால் சுபாஷ் இது n90க்கு சப்போர்ட் செய்யுமா?